இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

295 Views

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் மேலும் 20 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இவர்களில் 11 பெண்களும் 09 ஆண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்களில் 14 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.

இதற்கமைய, தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் என்ற வகையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 419 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்றைய தினம் 725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 05,66,196 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply