இலங்கையின் பொருளாதார நெருக்கடி: நோர்வே நிதி உதவி

58 Views

இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் போஷாக்கு நெருக்கடி குறித்து நோர்வே கவலை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் என்னிகன் குய்ட்ஃபெல்ட், நோர்வே 13மில்லியன் குரோன்களை ஐ.நா சபையின் மனிதாபிமான பதில் திட்டத்துக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடி கடுமையான மனிதாபிமான சூழ்நிலை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வரும் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பதில் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட உலக உணவுத் திட்டத்திற்கு 5மில்லியன் குரோன்களையும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்கும் சனத்தொகை அமைப்புக்கும் 8மில்லியன் குரோன்களையும் நோர்வே வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் என்னிகன் குய்ட்ஃபெல்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கும் நோர்வே முன்னுரிமை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply