வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (27) உத்தரவிட்டது.
வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.