கனடாவில் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம்

348 Views

சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்ப

கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் சுமந்திரன் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நடாத்திய கனடிய தமிழர்களுக்கான பொதுக் கூட்டத்தில் திரு சாணக்கியன் அவர்களின் பேச்சை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் திரு சுமந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்து சில நிமிடங்கள் கடந்த நிலையில் பொதுமக்கள் கேள்விகளை கேட்டு கலவரத்தில் ஈடுபட்டதால் பொதுக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டு சுமந்திரன் பாதுகாப்பாக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிக நேரம் சுமார் 100 வரையான தமிழ் இன உணர்வாளர்கள் மண்டபத்துக்கு வழியே பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மண்டபத்துக்கு உள்ளேயும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர் பொதுமக்களது எதிர்ப்பாளர்களது ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு மதிப்பளித்து இடம் அளித்த பொலிஸார் நிலைமையை மிகவும் மனிதநேயத்துடன் கையாண்டு கூட்டத்தை கலைந்து செல்ல வழிவகை செய்தனர் எனினும் அங்கே கடமையிலிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது கையை வைத்து வழியே பிடித்து தள்ளியதால் மேலும் எதிர்ப்பு வலுப்பெற்று மோசமான நிலையை அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி- தினக்குரல் ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad கனடாவில் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம்

Leave a Reply