ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் அவருக்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற விசேட அதிரப்படையினருக்கும் எதிராக யாழ்மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 3 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.
வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினராக அங்கம் வகிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி தனுபன் ஆகியோரே முறைப்பாடு செய்துள்ளனர் .
யாழ் மத்திய கல்லூரியில் கடந்த 6 ஆம் திகதி தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம்.
மிகவும் குறைந்தளவிலான யாழ் தேர்தல் மாவட்ட வாக்குகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்காமல் வேண்டுமென்று நீண்ட நேரத்திற்கு இழுத்தடிப்பு செய்தமைக்காக அங்கு வாக்குவாதம் இடம்பெற்றது.
அங்கு திடீரென்று வந்த சுமந்திரனும் அவரது பாதுகாவர்களும் சுமந்திரனின் உத்தரவில் எங்களையும், கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனையும் இன்னும் பலரையும் தாக்கினர்.
அந்த பகுதி யாழ் மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவரது முடிவினை பெற்றுக்கொள்ளாது சுமந்திரனின் பாதுகாவலர்கள் இந்த ஜனநாயக விரோத செயலை தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டு மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.