திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் ..!

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னால் செவ்வாய்க்கிழமை (22) மாலை 6.00 மணிக்கு 08 நாள் நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது.

இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.