கொழும்பு – போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் போது பேரணில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த மே 9ஆம் திகதி குழுவொன்றால் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாமையை கண்டித்தும் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன் போது காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News