மருந்துகள் இல்லை : கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் சாத்தியம் -மருத்துவர்கள் எச்சரிக்கை

230 Views

மருந்துகள் இல்லை

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார்.

சராசரியாக, தேசிய மருத்துவமனையில் ஒரு நாளைக்கு நான்கு இதய சத்திரசிகிச்சைகள் செய்யப்படுகின்றன, மேலும் அந்த எண்ணிக்கை இப்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் இதய நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதய சத்திர சிகிச்சையின் போது வழங்கப்படும் பல அவசர மருந்துகளுக்கு வைத்தியசாலையில் தட்டுப்பாடுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் மருந்துகள் வழங்கப்படாவிட்டால், மற்ற சத்திரசிகிச்சைகள் தடைப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Tamil News

Leave a Reply