வவுனியா :பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் கதவடைப்பு போராட்டம்

செட்டிகுளத்தில் கதவடைப்பு

செட்டிகுளத்தில் கதவடைப்பு

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று (20) செட்டிகுளத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு நாடு பூராகவும் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசாங்கத்தை வீட்டுக் செல்ல வலியுறுத்தியும் நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக கதவடைப்பு போராட்டத்திற்கு 300 தொழிற்சங்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன.

IMG 6599 வவுனியா :பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் கதவடைப்பு போராட்டம்

அந்தவகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக   அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கும் மாணவர் வரவு மிகக் குறைவாக காணப்பட்டமையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.