சீன அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு எரிபொருள்,உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

104 Views

சீன அரசாங்கத்தினால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன்களை விவசாயிகளுக்கு கையளிக்கப்படும்  வேலைத்திட்டம்  நேற்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது.

சீன அரசாங்கம் இலங்கை விவசாய தேவைகளுக்காக 6.98 மில்லியன் லீற்றர் டீசலை எரிபொருளை இலவசமாக வழங்கியுள்ளது.

இந்நிலையில், சீன – இலங்கை பெளத்த நட்புறவுச் சங்கம் மற்றும் சீன துாதரகத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 225 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நேற்று (2) உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply