சீன மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய வகையில் பாரிய குழு ஒன்று இலங்கைகக்கு வரவுள்ளது.
இந்த குழு, அடுத்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் செங்ஹொங் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினர் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றான கடன் மறுசீரமைப்பை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில், அதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம், சீனாவுடன் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.