இலங்கையை ஐ.நாவில் நிறுத்த நடவடிக்கை – சீன நிறுவனம் கடும் எச்சரிக்கை

136 Views

சீன நிறுவனம் கடும் எச்சரிக்கை

இலங்கை அரசாங்கத்துடன் உரம் தொடர்பான மோதலில் சிக்குண்டுள்ள சீன நிறுவனம் Qingdao Seawin Biotech இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்யப் போவதாக சீன நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி மற்றும் தனிமைப்படுத்தல் சேவை தனது நிறுவனத்துடன் உரம் தொடர்பான அறிக்கையை திருத்திக்கொள்ளாவிட்டால், இலங்கைக்கு எதிராக ஐ.நா.விடம் முறைப்பாடு செய்யப்போவதாக சீன நிறுவனம் எச்சரித்துள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை தவறானது கௌரவத்திற்கும் நல்லெண்ணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘எங்கள் நிறுவனம் கடந்த 20 வருடங்களாக தேச உரம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது. நாங்கள் எங்கள் தரத்தை பின்பற்றினோம்.

முழுமையான சான்றிதழ்களை வழங்கினோம்” என தெரிவித்துள்ள சீனா, “அனைத்து சான்றிதழ்களும் இலங்கையிடம் சமர்ப்பிக்கப்பட்டன அனைத்து தேவைகளையும் நிறைவு செய்தோம்” எனவும் தெரிவித்துள்ளது.

“எனினும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில்- எங்கள் உரத்தை கொள்வனவு செய்தவர்கள் எங்கள் உரத்தில் ஆபத்தான பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து எங்களிற்கு மின்னஞ்சலை அனுப்பினார்கள்” எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply