தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் 30 போர் விமானங்களை அனுப்பிய சீனா

தைவான் மீது சீனா படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவை எச்சரித்த சில நாட்களுக்குப் பின் தைவான் வான்  பரப்பிற்குள் 30 போர் விமானங்களை   சீனா அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த திங்கட் கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தைவான்  வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தனது போர் விமானங்களை நிலை நிறுத்தியுள்ளதாகவும் தைவான் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் சீனா தனது வான்வழி ஊடுருவல்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதோடு, அவற்றை பயிற்சிகள் என்றும் கூறுகிறது.

இத்தகைய நகர்வுகள், தைவானை கோபப்படுத்தியதோடு, அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

Tamil News