சீனா எங்கள் நட்பு நாடு. உய்கர் முஸ்லிம்களுக்கு ஆதரவு இல்லை- தலிபான் அறிவிப்பு

93676f3c 031b 4454 8e6b 379a0d06c0e01 1625598832 சீனா எங்கள் நட்பு நாடு. உய்கர் முஸ்லிம்களுக்கு ஆதரவு இல்லை- தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ் தானுக்குள் உய்குர் இஸ்லாமியர்களை விட மாட்டோம், சீனா எங்களின் நண்பன் என்று தலிபான் அறிவித்துள்ளது. உலக நாடுகள் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ் தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், தலிபான் படைகள் ஆப்கானிஸ் தானை மீண்டும் கைப்பற்றி வருகிறது. கடந்த 2 வாரங்களில் ஆப்கானிஸ் தானில் 85% இடங்களை ஆக்கிரமித்து விட்டோம் என்று தலிபான் அறிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் மொத்தமாக வெளியேறிய பின் மீதம் இருக்கும் மாவட்டங் களையும் தலிபான் கட்டுப்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், தலிபானின் இந்த அறிவிப்பு உய்குர் இஸ்லாமியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் உதவியுடன் ஜிங்ஜியாங் பகுதியில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ் தானில் குடியேறலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தனர். ஆனால் தலிபானின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது.

அதே நேரம் தலிபான் ஆதிக்கம் காரணமாக ஆப்கானிஸ் தானில் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 சீனா எங்கள் நட்பு நாடு. உய்கர் முஸ்லிம்களுக்கு ஆதரவு இல்லை- தலிபான் அறிவிப்பு

Leave a Reply