‘யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் எல்லைப் பாதுகாப்பு இல்லை, குறுகிய நேரத்தில் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்குச் செல்ல முடியும் என்பதன் காரணமாகவே அண்மைக்காலமாகச் சீனாவின் பார்வை வடக்கை நோக்கியிருக்கிறது’ என்று டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
‘சீனா இலங்கைக்கு உதவி செய்வதை விட இலங்கையிலுள்ள காணிகளையும் வளங்களையும் தனதாக்கிக் கொள்ளும் வகையிலேயே செயற்படுகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘சீன அரசாங்கம் வடக்கில் அரிசியும், வலைகளையும் வழங்கி மக்களை அவர்கள் பக்கம் திசை திருப்ப முயற்சித்தது.’
‘எனினும் தமிழ் மக்களின் உணர்வுகளை ஒருபோதும் மாற்ற முடியாது’ என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதேவேளை ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்திருந்தால் வடக்கில் தேசிய மக்கள் சக்தியால் வாக்குகளை பெற்றிருக்க முடியாது’ என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



