உக்ரைனில் உடனடியான போர் நிறுத்தத்திற்கு சீனா அழைப்பு

96 Views

உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள மற்றும் அதற்கு உதவிகளை வழங்குகின்ற எல்லா தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கான சீனா தூதுவர் குயின் ஹங் கடந்த புதன்கிழமை (20) தெரிவித்துள்ளார்.

தற்போதைய யுத்தம் பல துறைகளுக்கு பரவலாம், பொருளாதார வீழ்ச்சி, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். இந்த போரில் ஈடுபடுகின்ற ரஸ்யா, உக்ரைன், அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு போன்றவை உடனடியாக போரை நிறுத்தி பேச்சுக்களின் மூலம் தீர்வைக் காண முன்வரவேண்டும்.

எல்லா நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் இறைமை போன்றன உறுதிப்படுத்தப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஸ்யா போரில் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட முடியும் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிற்ரி குலேபா தெரிவித்துள்ளார்.

அதாவது உக்ரைன் அரசு அமைதியை விரும்பவில்லை அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடவே விரும்புகின்றது என அதற்கு பதிலழித்த ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் மரியா சகரோவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply