1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் திருத்தப்பட்ட 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, 27 நிறுவனங்கள், செயலிகள் மற்றும் அமைப்புகளைத் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் விசாரணையில், மேக்ஸ் ஆப் மீடியா லிமிடெட், அதன் இணை நிறுவனங்களான மேக்ஸ் எல்.கே. (பிரைவேட்) லிமிடெட் மற்றும் மேக்ஸ் மீடியா லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து, தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டதுடன், அதனை நடத்தி ஊக்குவித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
வங்கிச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ், பின்வரும் நிறுவனங்கள், செயலிகள் மற்றும் அமைப்புகளும் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
1. Tiens Lanka Health Care (Pvt) Ltd
2. Best Life International (Pvt) Ltd
3. Mark-Wo International (Pvt) Ltd
4. VML International (Pvt) Ltd
5. Global Lifestyle Lanka (Pvt) Ltd
6. Fast3Cycle International (Pvt) Ltd
7. Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka
8. OnmaxDT
9. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group
10. Fastwin (Pvt) Ltd
11. Fruugo Online App / Fruugo Online (Pvt) Ltd
12. Ride to Three Freedom (Pvt) Ltd
13. QNet / Questnet
14. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School
15. Ledger Block
16. Isimaga International (Pvt) Ltd
17. Beecoin App and Sunbird Foundation
18. Windex Trading
19. The Enrich Life (Pvt) Ltd
20. Smart Win Entrepreneur (Pvt) Ltd
21. Net Fore International (Pvt) Ltd / Netrrix
22. Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd
23. SGO / sgomine.com
24. I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated websites: icanonlineadvertising.com, bannercuts.com, bannercuts.lk, bannercusts.net and bannercuts.org
25. Infinity Rover (Pvt) Ltd
26. TM App
27. Max App Media Ltd and its affiliated companies, Max LK (Pvt) Ltd and Max Media Lanka (Pvt) Ltd.



