தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை மாநிலம் பாகூரில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68-வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
புதுவை மாநில இளைஞரணி அமைப்பாளர் திரு.அருள்ஒளி அவர்களின் ஏற்பாட்டில் தேசியத் தலைவரின் 68 படங்களை ஏந்தி பேரணியாக நடந்து சென்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திரு தி.திருமால்வளவன் அவர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.