கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரம்

நிதி அமைச்சு முன்வைத்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று பிற்பகல் ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கடன் மறுசீரமைப்புத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த திட்டத்தை அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஏற்கனவே வர்த்தமானியில் வௌியிட்டுள்ளார்.