மட்டக்களப்பு: பட்டிப்பளை பிரதேச செயலகத்தை செயற்படவிடாது பௌத்த மதகுரு போராட்டம்

127 Views

பட்டிப்பளை பிரதேச செயலக

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்ட போராட்டம் நடாத்தி வருகின்றார்.

இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனவளப்பகுதிக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த பிக்கு முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

WhatsApp Image 2021 11 15 at 12.33.25 மட்டக்களப்பு: பட்டிப்பளை பிரதேச செயலகத்தை செயற்படவிடாது பௌத்த மதகுரு போராட்டம்

மேலும் பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்கு போராடி வருவதாகவும்  காவல்துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப் படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த பிக்கு செயற்படுகின்ற போதிலும் காவல்துறையினர் வேடிக்கைபார்க்கும் நிலையே  தற்போது  உள்ளது.

WhatsApp Image 2021 11 15 at 14.30.14 மட்டக்களப்பு: பட்டிப்பளை பிரதேச செயலகத்தை செயற்படவிடாது பௌத்த மதகுரு போராட்டம்

அதே நேரம்   குறித்த தேரரை வெளியேற்றக்கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply