ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு அரை பங்கிற்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக YouGov என்ற நிறுவனம் கடந்த மாதம் மேற்கொண்ட வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் கடந்த செவ்வாய்க் கிழமை(13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை பிரித்தானியா எட்டு வருடங்களுக்கு முன்னர் நடத்தியிருந்தது. அதில் 50 விகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் ஆதரவாக வாக்களித்தததால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்றிருந்தது.
2000 மக்களிடம் இந்த நிறு வனம் தனது கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது அதில் 59 விகிதமானவர்கள் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருந் தனர். 41 விகித மக்கள் எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை பேணுவதை தாம் விரும்புவதாகவும், ஆனால் மீண் டும் அதனுடன் இணைவதை விரும்பவில்லை எனவும் 60 விகித மக்கள் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த கருத்தை 17 விகிதமானவர் கள் எதிர்த்துள்ளதுடன், 20 விகிதமானவர்கள் அது தொடர்பில் கருத்துக்களை கூற மறுத்துவிட்டனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியது தவறான முடிவு என 55 விகிதமானவர்களும், விலகியது சரி என 34 விகிதமானவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி மிகப்பெரும் வெற்றியை ஈட்டியபோதும் ஐரோப்பிய ஒன்றி யத்தில் பிரித்தானியா மீண்டும் இணை யாது என புதிய பிரதமர் கியர் ஸ்ராமர் தெரிவித்துள்ளார்.