இஸ்ரேலின் தலைநகர் ரெல்அவிவ் பகுதியில் மூன்று பேரூந்துகளில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததால் அவை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரு பேரூந்துகளில் இருந்து வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை(20) இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள எல்லா பேரூந்துகள் மற்றும் தொடருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகேவ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் மேற்கு
கரைப் பகுதியில் தமது நடவடிக் கைளை அதிகரிக்கவுள்ளதாக இஸ் ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரி வித்துள்ளார்.
ஆனால் காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது கட்ட போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்புக்கள் இடம் பெற்றுள்ளது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகவும், இது இஸ்ரேல் மீண்டும் முழு அளவிலான போரை தொடர்வதற்கு வழிவகுக்கும் எனவும் சொவ்பான் சென்ரர் எனப் படும் அமைப்பின் தலைவரான கொலின் கிளார்க் தெரிவித்துள்ளார்.
காசாவில் இருந்து இஸ்ரேலிய மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்து தொடாபில் அரபு உலகத்தின் தலைவர் வெள்ளிக்கிழமை(21) சந்தித்து பேசவிருந்த சமயம் இந்த குண்டு வெடிப் புக்கள் இடம்பெற்றுள்ளன.
சவுதி அரேபியாவின் மன்னர் மொக மெட் பின் சல்மான் இந்த கூட்டத்தை ஏற்படுத்தியிருந் தார். எகிப்த்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடு களும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தன.



