ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு -கொண்டாடும் மக்கள்  

5148 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு -கொண்டாடும் மக்கள்  

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையை  பெர்முடா பெற்றிருக்கின்றது.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிக்கு பெர்முடா சார்பில் ஃப்ளோரா டஃப்பி மற்றும் டாரா அலிசாடே ஆகிய  இரண்டு பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி. நீச்சல், ஓட்டம், சைக்கிள் ஆகியவை கலந்த டிரையத்லான் பந்தயத் தொலைவை அவர் ஒரு மணி நேரம் 55 நிமிடம் 36 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர் பங்கேற்ற 51 கி.மீ. தொலைவு கொண்ட டிரையத்லான் போட்டி, அவரது நாட்டின் மொத்த அகலத்தையும் விட அதிகமானது. வெறும் 40 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்டதுதான். அதே நேரம் அந்நாட்டின் மக்கள் தொகை சுமார்  63 ஆயிரம்  மட்டுமே.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா, பிரிட்டன் முடியாட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நாடாகும்.  பதின்ம வயதாக இருந்த போது பிரிட்டனுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை டஃப்பி மறுத்திருந்தார்.

இந்நிலையில், ஒலிம்பிக் வரலாற்றில் பெர்முடா நாட்டுக்காக விளையாடி  முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார் ஃப்ளோரா டஃப்பி .   இந்தச் சாதனையை பெர்முடா மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021