மட்டக்களப்பு: மூடப்பட்டு வரும் உணவகங்கள்

மூடப்பட்டு வரும் உணவகங்கள்

மூடப்பட்டு வரும் உணவகங்கள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் பெருமளவான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக நகருக்குள் அன்றாட தேவைக்கு வருவோரும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதை காணமுடிந்தது.

அண்மைக்காலமாக நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் எரிவாயு தட்டுப்பாடு மிக மோசமான தாக்கத்தினை செலுத்தி வருகின்றது.

மூடப்பட்டு வரும் உணவகங்கள்

மட்டக்களப்பு மாநகரில் உள்ள முக்கிய உணவகங்கள் பல இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதை காணமுடிந்துள்ளதுடன் அந்த உணவகங்களில் காஸ் இல்லாத காரணத்தினால் மூடப்படுவதாக பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

மூடப்பட்டு வரும் உணவகங்கள்

மட்டக்களப்பு நகரில் முக்கிய திணைக்களங்களங்கள்,வர்த்தக நிலையங்கள் உள்ள நிலையில் உணவகங்களை நம்பி கடமைக்கு வருவோர் இன்றைய தினம் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது.