மட்டக்களப்பு மாநகரசபையிடம் பல முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக முதல்வர் தெரிவிப்பு

140 Views

மட்டக்களப்பின் பொருளாதார அபிவிருத்தி

மட்டக்களப்பின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கவிரும்பும் புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் உள்ள முதலீட்டு திட்டங்களை அமுல்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்  தெரிவித்துள்ளார்.

இந்த முதலீட்டு திட்டங்களை அமுல்படுத்தும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களும் பங்காளிகளாக மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சூரியசக்தி மின்உற்பத்தி மூலம் மின்சாரத்தினைப்பெறும் வகையிலான சூரியமின்சக்தி கலங்களை பொருத்தும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

உலக வங்கியின் சுமார் 80இலட்சம் ரூபா நிதியுதவியுடன் இந்த சூரியமின்சக்தி கலங்கள் பெரும்பணிகள் இன்று மட்டக்களப்பு பொதுச்சந்தையில் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், “மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருமானம் ஈட்டும் வகையில் இந்த சூரிய சக்தி மின்உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பல திட்டங்கள் உலக வங்கி மற்றும் மாநகரசபையின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply