தமிழ் அகதி குடும்பத்தினரை விடுவித்த அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம்

தமிழ் அகதி குடும்பத்தினரை விடுவித்ததமிழ் அகதி குடும்பத்தினரை விடுவித்த அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம்

அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய ஆட்சி காலக்கட்டத்தில் பல்வேறு இன்னல்களையும் பல ஆண்டுக்கால தடுப்புக் காவலையும் எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தினரை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இவர்கள் முன்பு வாழ்ந்த பிலோயலா பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் குடிவரவு நிலையில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படும் வரை அவர்கள் பிலோயலா பகுதியிலேயே சட்டரீதியாக வசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

  Tamil News