அவுஸ்திரேலிய விசா விவகாரம்: நீதிமன்ற வழக்கொன்றில் தமிழ் அகதி குடும்பம் வெற்றி

அவுஸ்திரேலிய விசா விவகாரம்

அவுஸ்திரேலிய விசா விவகாரம்: தமிழ் அகதிகளான பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாத வகையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில், procedural fairness- பரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை பேணப்படவில்லை என அவுஸ்திரேலிய Federal Circuit நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரியா குடும்பத்தினரின் bridging விசா விண்ணப்ப விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் Alex Hawke குடிவரவுச் சட்டத்திலுள்ள “lower the bar” என்ற அம்சத்தை முன்மொழிந்திருப்பதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் இக்குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவருக்கும் 12 மாதங்களுக்கான bridging விசா வழங்கப்பட்டது. ஆனால் இரண்டாவது மகள் தருணிகா இதில் உட்படுத்தப்படவில்லை.