பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீது தாக்குதல் முயற்சி  -ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை அரச புனாய்வுப்பிரிவினைச் சேந்தவர் தாக்கி விட்டு தப்பிச் சென்றதோடு, பிறிதொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்துள்ள சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் தனது கடுமையான கணடனத்தை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று யூன் 2ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி பற்றி உங்களது கவனத்திற்கு கொண்டுவ ருகிறோம்.

கிடைக்கப்பட்ட அறிக்கைகளின் படி, இன்று வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்த திரு. கஜேந்திரகுமார் மீது உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு முயன்றுள்ளனர். அங்கு திரண்டிருந்த மக்கள் இவ்விருவரையும் துரத்திப்பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட மற்றவர் பிடிக்கப்பட்டார். பிடிபட்ட நபர் தன்னை சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தியுள்ளார்

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான கொலை முயற்சியை ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் மிகவன்மையாகக் கண்டிப்பதுடன், இவ்வாறான ஜனநாயக விரோதமான மனிதவுரிமை மீறல்களுக்கு இடமளிக்கவேண்டாம் என சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கொடுக்குமாறு சிறிலங்காவிற்கு உதவும் நாடுகளைக் கோருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டன அறிக்கை