கிளாலியில் தனியார் காணியை கடற்படைக்கு வழங்க முயற்சி -மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

160 Views

மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி 5 ஏக்கரை கடற்படையினருக்கு அளவீடு செய்து வழங்க எடுத்த முயற்சி பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

அளவீட்டு பணிக்காக நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு காலை சென்றுள்ளனர். இந்த நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply