கிராஞ்சி.வேரவில்.வலைப்பாடு. ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவர் ஒய்வுபெற்ற ஆசிரியர் சங்கரப்பிள்ளை ஆனந்தநடராஜன் மீது வனவளத்திணைக்களத்தினர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவிக்கையில்,
கடந்த 07/09/2026- 4,30மணியளவில் இரண்டு வாகனங்களில் 15 மேற்பட்ட வனவளத்திணைக்கள அதிகாரிகள் ஆனந்தன் ஆசிரியர் தென்னந்தோட்டத்தில் தென்னைகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும்போது அவருடைய காணியுக்குள் புகுந்து அவரைபிடித்து கை விலங்கு போட்டுவிட்டு
ஆறு வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் சுற்றி நின்று அவர்மீது தாக்குதல் நடாத்தி அவரை கைதுசெய்துதமது வாகனத்தில் ஏற்றி பூநகரியில் அமைந்துள்ள தமது அலுவலகத்துக்குகொண்டு சென்று வழக்கை பதிவுசெய்துவிட்டு பூநகரி காவல்துறையினரிடம் பாரப்படுத்தி காவல் நிலையத்தில் தடுத்து வைத்தனர்.
நேற்று 08/09/2026 காலை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தியபோது நீதிமன்றினால் இரண்டு நபர்களின் தேசிய அடையாள அட்டை பிணையில் விடுதலைசெய்ததுடன் அடுத்த ஆண்டு 2027ம் ஆண்டு புரட்டாதி மாதத்துக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளதாக அவருடைய மகனார்தெரிவித்தனுடன் தந்தையாருக்கு முள்ளந்தண்டுபகுதிகளில் நோவுகள் உள்ளதினால் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அவர் மீது வனவளத்திணைக்களத்தினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வனவளத்திணைக்களத்துக்கு சொந்தமான காணியை ஆனந்தன் ஆசிரியர் பிடித்து வைத்திருப்பதாக, கடந்த முப்பது வருடத்துக்கு முதல் தாம் அந்த காணியை கிராஞ்சியை சேர்ந்தவர்களிடம் பணம்கொடுத்து வாங்கி வெளியாகி தென்னைகளை வைத்தபோதும் கடந்த கால போர்நடவடிக்கையில் தாம் இடம்பெயர்ந்து 2009 போர் மௌனிப்புக்குப்பின் தாம் முகாம்களிலிருந்து மீளக்குடியமர்த்தப்பட்டபோது தமதுகாணிகள் அனைத்தும் மரங்கள் வளர்ந்து பற்றைகளாக இருந்தபோதும் தாம் 2011ம் ஆண்டு மீண்டும் காணிகளை துப்பரவு செய்து காணிகளை அடைத்து 2018/2019ம் ஆண்டுகளில் 400 தென்னைமரங்களை நடுகைசெய்து பரமரித்துவந்ததுடன் இன்று அனைத்து மரங்களும் பாளைவந்து காய்க்கும் நிலையில் உள்ளது என்றும் சில மரங்கள் காய்க்கின்றது எனவும் தெரிவித்தார்
2011தொடக்கம் 15வருடங்களாக தாம் காணிகளை பராமரித்து தென்னைகளை நடுகளைபண்ணியிருந்தும் 15 வருடங்களாக தமது காணி பக்கமே வருகைதராத வனவளத்திணைக்களம் முதல்முறையாக நேற்று முன் தினம் 07/09/2026 வருகைதந்து தமக்குரிய காணிகள் என சொல்லி தந்தையை கைதுசெய்து கைவிலாங்கிட்டு தாக்கியதாக மகனார்தெரிவிக்கின்றார்
கிராஞ்சி .வேரவில்.வலைப்பாடு கிராமங்களில் மக்களின் காணிகளிலும் அவர்களின் வயல் நிலங்கள்.தோட்டகாணிகள்.தென்னந்
இரண்டு நாட்களுக்கு முதல் கூட இந்த கிராமங்களில் இருந்து 70க்கு மேற்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு மன்னார் தோட்டவெளி.கொன்னையன்குடியிருப்




