மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல் : 34 பேர் உயிரிழப்பு!

மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன.வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.