ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிக கப்பல்கள் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பலில் இருந்து புகை கிளம்பி வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில் கப்பலில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் மேலும் 2 வணிக கப்பல் ஹோர்முஸ் நீரிணை அருகே தாக்கப்பட்டன. முன்னதாக இந்தப் பகுதியில் 16 ஈரானிய கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது.
அதன் பிறகு அங்கு எந்த கண்ணிவெடியும் வைக்க வேண்டாம் என ட்ரம்ப் ஈரானை எச்சரித்திருந்தார்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட அந்தப் பிராந்தியத்தின் பகுதிகளில் ஈரான் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
இதற்கிடையே துபை விமான நிலையம் அருகே இரண்டு ஆளில்லா விமானங்கள் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



