ஜனாதிபதியும் பிரதமரும் சொல்லப்போகும் ஒரே பொய்யையாவது சரியாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டுவிதமான பொய்களைக் கூறி வருகின்றனர். இந்நாட்டை ஆட்சி செய்வது “தெளிவான பொய்களைக்” கூறும் அரசாங்கம் என்பது பாலர் வகுப்புச் சிறுவனுக்குக்கூடத் தெரியும். நாட்டு மக்கள் அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள் என்றால், முடியுமானால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம் பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.



