பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை படுகொலை செய்தவர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் நபர் ஒருவரை படுகொலை செய்தமைக்காக மரணதணடனை வழங்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர ஆகியோர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாடாளுமன்றத்துக்கு வருகை தரலாம் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர், தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சி என்பவற்றுக்கு உரிய, தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பெயரிடாவிட்டால், அந்தக் கட்சிகளுக்குரிய ஆசனங்களை வெறுமையாக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.