கடந்த மார்ச் மாதம் வீழ்ச்சி கண்ட சுவிற்சலாந்தின் மிகப்பெரும் வங்கியான கிறடிற் சூசி தொடர்பில் சுவிற்சலாந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக ஆசியா முதலீட்டாளர்கள் சுவிஸ் அரசு மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வங்கியின் வீழ்ச்சியை தடுப்பதற்கு அதனை மற்றுமொரு வங்கியான யூ.பி.எஸ் உடன் இணையுமாறு சுவிஸ் அதிகாரிகள் வற்புறுத்தியிருந்தனர். இந்த முயற்சி முதலீட்டாளர்களின் 17 பில்லியன் டொலர்களை இல்லாது செய்திருந்தது.
எல்லாம் விரைவாக இடம்பெற்று முடிந்துவிட்டது. நான் 500,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வங்கி முறிகளை பெற்றிருந்தேன். வங்கி நெருக்கடியை கடந்த ஜனவரி மாதம் சந்தித்தபோதும் அவர்கள் என்னை நம்ப வைத்தனர் என சிங்கப்பூரை சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வாறான வங்கி முறிகள் வங்கிகள் வீழ்ச்சியடையும் போது முற்றாக இல்லாது செய்யப்படும். அதாவது முதலீட்டாளர்கள் பணம் முழுவதையும் இழப்பர்கள். சிங்கப்பூர் மட்டுமல்லாது உலகம் எங்கும் இருந்து பெருமளவான முதலீட்டாளர்கள் சுவிஸ் அரசு மீது வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
நானும் எனது மனைவியும் ஓய்வூதிய சேமிப்பை இந்த வங்கியில் வைப்பிட்டிருந்தோம். தற்போது முழுவதையும் இழந்துள்ளோம். எமக்கு இப்போது தூக்கமில்லை. இந்த உலகில் யாரும் இனிமேல் சுவிஸ் அரசை நம்பப்போவதில்லை என மற்றுமொரு ஆசிய முதலீட்டாளர் தெரிவித்துள்ளார்.