முன்னாள் பிரதமர் ஹசீ னாவை கைது செய்து நீதிமன்றத்தில் எதிர்வரும் மாதம் ஒப்படைக்குமாறு பங்களாதேசத்தின் அனைத்துலக குற்றவியல் விசாரணை தீர்ப்பாயம் கடந்த வியாழக்கிழமை(17) உத்தரவிட்டுள் ளது. அரசுக்கு எதிராக மாணவர் கள் மேற்கொண்ட புரட்சியை தொடர்ந்து ஹசீனா இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவு க்கு தப்பியோடியிருந் தார்.
தற்போது இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகின்றது. ஹசீனா பிரித்தானியா செல்ல முயன்றபோதும் அந்த நாடு அவருக்கான அனுமதியை மறுத்து விட்டது.
படுகொலைகள், நீதிக்குப்புறம்பான கைதுகள், வன் முறையை தூண்டியது உட்பட பெருமளவான குற்றங்கள் ஹசீனாவுக்கும், அவருடன் நாட்டைவிட்டு தப்பியோடிய 45 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளன. கடந்த ஜுலை முதல் ஆகஸ்ட்டு வரையிலும் இடம்பெற்ற வன்முறைகளில் 1000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டதாக பங்களாதேசத்தின் சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.
கடுமையான படை பலத்தை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களை ஹசீனா அடக்க முனைந்ததாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன. எனினும் அவர் அதனை மறுத்து வரு கின்றார். இந்த போராட்டத்தை அடுத்து அவர் இந்தியாவுக்கு தப்பியோடிய பின்னர்இ அவரின் இடத்திற்கு மேற்குலகம் சார்ந்த பொருளியலில் நோபல் பரிசு பெற்ற முஹமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு சென்ற பின்னர் ஹசீனா(77) வெளியில் நடமாடவில்லை எனினும் அவர் புதுடில்லியில் உள்ள வான்படைத்தளத்தின் விடுதியில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின் றது. குற்றவாளிகளை நாடுகடத்தும் உடன்பாடு இந்தியா மற்றும் பங்களாதேசத்திற்கு இடையில் இருந்தாலும், அது அரசியல்வாதிகளுக்கு பொருந் தாது என புதுடில்லி தெரிவித்துள்ளது.