கச்சதீவை மீளப்பெற படை எடுக்கப் போகின்றீா்களா? இந்திய முன்னாள் வெளியுறுவு அமைச்சா் கேள்வி

yaswaht sinha கச்சதீவை மீளப்பெற படை எடுக்கப் போகின்றீா்களா? இந்திய முன்னாள் வெளியுறுவு அமைச்சா் கேள்விகச்சதீவு விவகாரத்தை மீண்டும் பிரச்னையாக எழுப்புவதால் இலங்கையுடனான உறவு பாதிக்கப்படும். கச்சதீவை திரும்பப் பெறுவதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? இலங்கை மீது படை எடுக்கப் போகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா.

கச்சதீவு விவகாரம் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையிலேயே யஷ்வந்த் சின்ஹா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், “பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் இதை தேர்தல் பிரச்னையாக பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்துகிறது. இலங்கையுடனான நம் உறவில் ஏற்படப்போகும் தாக்கங்களை சிறிதும் சிந்திக்காமல் இந்த விவகாரத்தை எழுப்பி உள்ளனர்” என்றும் அவர் சாடினார்.

யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் 1990 – 1991 வரை நிதி அமைச்சராகவும் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் 1998 – 2002 வரை வெளிவிவகார அமைச்சராகவும் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.