கிழக்கின் சனத்தொகை விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களை நியமியுங்கள்-ஜெயசிறில்

263 Views

கிழக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதி தொல்லியல் செயலணிக்கு கிழக்கின் சனத்தொகை விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்குமாறு காரைதீவுப் பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்தார்.

காரைதீவு பிரதேசசபையின் 29வது மாதாந்த சபை அமர்வு திங்கட்கிழமை சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் கூறுகையில்:

”கொரோனா காலகட்டத்தில் இத்தொல்லியல் செயற்பாடு அவசியமா? என்கிற கேள்வி எழுகின்ற அதேவேளை அவ்வணியில் நியமிக்கப்பட்டுள்ள 11பேரும் சிங்களபௌத்தர்களாவர். பலத்த எதிர்ப்புகளின்பின் ஒப்புக்காக தமிழ் முஸ்லிம் இருவரை நியமிப்பதன்மூலம் அது நிவர்த்திக்கப்படாது. எனவே கிழக்கின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும் என ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்கிறார் ஜெயசிறில்

 

Leave a Reply