நுவரெலியாவில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்

109 Views

நுவரெலியா அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

நாட்டில் ரணில் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகிய பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிப்போம் எனவும் தமது உரிமைகளுக்காகப் போராடி வரும் மக்களைக் கைது செய்வது முற்றிலும் பிழை , நாட்டில் தற்போது சீரழிந்த பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும்.

அரசாங்கம் சுயநலத்தைக் கைவிட்டு பொது மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும், போராட்டம் நடாத்தும் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பி போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply