உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவி: அவசரகாலநிலை குறித்து ரவிகரன் சாடல்

உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள்  அவசரகால நிலையை  நோக்குவதால்  இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது என பாராளுமன்ற உ றுப்பினர் துரைராசா ரவிகரன் சாடியுள்ளார்.

மேலும் ‘கடந்தகாலங்களைப் போன்று தமிழர் குரல் வளையை நெரித்து, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைமுறைகளைத் வடகிழக்கில் தொடர்வதற்கான கருவியாக அவசரகால நிலை அமைதல் கூடாது.இதனை   அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்’  என  ரவிகரன்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற  அவசரகால சட்டம் அமுலாக்கம்  நீட்டிப்பு  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.