அனோஜன் விடுதலை விவகாரம் – மலையக இந்து குருக்கள் சங்கத்தினால் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள திரு சிவராசா அனோஜனை  விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி,  மலையக இந்து குருக்கள் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மகஜரை  மலையக இந்து குருக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள்  புதன்கிழமை (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க  கையளித்தார்.