9ஆவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயரை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா முன்மொழிந்தார். குழுக்களின் பிரதி தவிசாளர் நியமனத்துக்காக வேறு எவரது பெயரும் முன்மொழியப்படாத காரணத்தினால் இவர் குழுக்களின் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்தன அறிவித்தார்.