ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மன்னிப்புச்சபை கவலை

53 Views

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்  தடுத்துவைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலாமார்ட் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு நபர்கள் குறித்து கரிசனை வெளியிட்டு நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முக்கிய மாணவர் தலைவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்,இது இலங்கையில் மனித உரிமைகள் மீது  கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுஆர்ப்பாட்டம் மீது காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

Leave a Reply