சீனாவின் பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

அமெரிக்கா எங்கும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை வேவுபார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது.

அமெரிக்க ஆட்புலத்தில் உள்ள கடல் பகுதிக்கு அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

இதற்கு சீனா கடும் அதிருப்தியை வெளியிட்டிருப்பதோடு, சிவிலியன்களின் அளில்லா விமானம் ஒன்றை அமெரிக்கா படைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட பலூனே திசைமாறிச் சென்றிருப்பதாக சீனா கூறியுள்ளது.