அமெரிக்கா பொருளாதாரப் பயங்கரவாதத்தை மேற்கொள்கின்றது – ஈரான்

ரஸ்யாவுக்கு குறுந்தூர ஏவுகணைகளை விநியோகித்ததாக தவறாக ஈரான் மீது குற்றச் சாட்டுக்களை மேற்கொண்டுள்ள அமெரிக்கா எம்மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவந்துள்ளது என்பது பொருளாதார பயங்கர வாதம் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அறக்சி கடந்த புதன்கிழமை(11) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தடைக்கு முன்னர் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடு கள் ஈரான் மீது தடையை மேற் கொண்டிருந்தன. மேற்குலக நாடுகளின் இந்த திட்டமிட்ட செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் விரைவில் எதிர்கொள் வார்கள் என ஈரானின் வெளிவி வகார அமைச்சக பேச்சாளர் நசார் கனானி தெரிவித்துள்ளார்.

ஈரானின் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பறப்பதற்கு இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. ஈரானின் பலஸ்ரிக் எவுகணைகளை திட்டத்தில் பணியாற் றிய அதிகாரிகள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஸ்யாவுக்கு ஈரான் குறுந்தூர ஏவு கணைகளை விற்பனை செய்துள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் மற்றும் பிரித்தானியாவின் வெளி விவகாரச் செயலாளர் டேவிட் லமி ஆகியோர் கடந்த செய்வாய்கிழமை(10) கூட்டாக தெரி வித்திருந்தனர்.

120 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ஈரானின் பாத்-360 என்ற ஏவுகணைகளை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பில் ரஸ்ய படையினர் ஈரானில் பயிற்சிகளை மேற்கொண்டு திரும்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.