மாற்று இடத்தில் குடியிருப்பு: இலங்கை அகதிகள் கோரிக்கை

மாற்று இடத்தில் குடியிருப்பு

தமிழ்நாடு: ஆம்பூா் அருகே உள்ள அரசு தோ்வு செய்த இடத்தை தவிா்த்து, மாற்று இடத்தில் குடியிருப்பு கட்டவேண்டும் இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா் அருகே உள்ள மின்னூரில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்கு அரசின் சாா்பில் காளிகாபுரம் பகுதியில் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு குடியிருப்புகள் கட்ட அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் புதிதாக தேர்வு செய்துள்ள இடம், போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத இடமாக உள்ளதாகவும்  பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும்  தமது கோரிக்கையில் முன்வைத்துள்ளனர்.

Leave a Reply