அகதிகள் விவகாரம் : அவுஸ்திரேலியா நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம்- நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது?

அவுஸ்திரேலியா நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம்

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையிலான அகதிகள் மீள்குடியமர்த்தல் ஒப்பந்தம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏன் என நம்மில் பலரிடத்தில் கேள்விகள் இருக்கலாம்.

இந்த ஒப்பந்தம் தாமதப்படுத்தப்பட்டது ஏன்? கடந்த 2013ம் ஆண்டு, அவுஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர்

Julia Gillard மற்றும் நியூசிலாந்தின் அப்போதைய பிரதமர் John Key ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை உறுதிச் செய்தனர். ஆனால், இந்த ஒப்பந்த அறிவுப்புக்குப் பின் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் தொழிலாளர் கட்சி ஆட்சியை இழந்து தாராளவாத கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

நியூசிலாந்தில் அகதிகளை மீள்குடியமர்த்துவது என்பது அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகு வழியாக வருவதை ஊக்குவிக்கும் எனக் கூறிய தாராளவாத கட்சியின் அரசாங்கம், இந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டது.

இந்த சூழலில், மீண்டும் அவுஸ்திரேலியாவில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ‘ஆஸ்திரேலியா- நியூசிலாந்து’ இடையிலான அகதிகள் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு வந்த தாராளவாத கட்சியின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Tamil News