ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து 3 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021, ஆகஸ்ட் 15ம் நாள்ஆப்கானிஸ்தானில் அதிபராக இருந்த அஷ்ரப் கனியை அகற்றிவிட்டு, தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், தலிபான்களின் ஆட்சி நடைபெறும் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளதாகவும், மக்கள் போதுமான சுதந்திரம் இன்றி நெருக்கடியின் பிடியில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் சுமார் 4 கோடி மக்கள் வாழும் நிலையில் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ரொட்டியும், தேநீரும் மட்டும் உண்டு வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாக உள்ளதாகவும் உலக வங்கி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



