காஸாவில் சுமார் 17,000 பேர் கை, கால்களை இழந்துள்ளதாக தெரிவிப்பு

காஸாவில் சுமார் 17,000 பேர் கை, கால்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். பலர் பணையக்கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர்.  இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களினால் 40,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி  காணாமல் போயுள்ளனர்.

இந்த போரில் 17,000க்கும்பேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், சுமார் 17,000 பேர் கை, கால்களை இழந்துள்ளதாக  பெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை என்றும் செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

அதே நேரம் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். அதில்  சுமார் 4 இலட்சம் குழந்தைகளும் இடம்பெயர்ந்துள்ளனர்