ஐபோன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கியது…

நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக கச்சா எண்ணெய் விலையை உயர்வாகவே வைத்திருக்க, ஹார்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஈரான் புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொ ய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தியில், அடிக்கடி தாக்குதல் நடத்துவது மற்றும் ஓமன் வளைகுடா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதிகள் வரை செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவது ஆகியவை அடங்கும். மூடிஸ் அனலிட்டிக்ஸ் (Moody’s Analytics) தரவுகளின்படி, பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய ஈரானுடனான மோதல் சூழலால் அமெரிக்க நுகர்வோருக்கு சுமார் 265 பில்லியன் டாலர் செலவாகியுள்ளது; இது ஒரு வீட்டிற்கு சராசரியாக 2,000 டாலர் செலவாகும். அந்தச் செலவில் சுமார் 1,100 டாலர் எரிசக்தி விலை உயர்வால் ஏற்பட்டது; போருக்கு முன் ஒரு கேலன் பெட்ரோலின் விலை 2.98 டாலராக இருந்த நிலையில், தற்போது அது சராசரியாக 4.34 டாலராக உயர்ந்துள்ளது.
அனுமதிக்கப்படாத பாதையின் வழியாக ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது, ​​2,500-க்கும் மேற்பட்ட கொள்கலன்களை (containers) ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் கடலடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் (naval mine) மோதியதாக ஈரானின் IRGC கடற்படை தெரிவித்துள்ளது. புதன்கிழமை(14) காலை துபாயிலிருந்து ஆடம்பர வாசனை திரவியங்கள் மற்றும் ஐபோன்களை (iPhones) ஏற்றிச் சென்ற அந்த கப்பல் தீப்பிடித்து நீரிணைக்குத் தெற்கே மூழ்கியது. ஹார்முஸ் நீரிணையில் தாக்கப் பட்டுக் மூழ்கடிக்கப்பட்ட அந்தக் கப்பலின் காட்சிகள் வெளியாகியுள்ளன.